ஞாயிறு, 18 மார்ச், 2018

மரணமும் அறிவியலும்

உயிரியல் விளங்காதவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி

1. இறந்தவுடன் உயிர் எங்கே செல்கிறது?

விடை. உயிர் என்பது ஒரு இயக்க ஆற்றல். இந்த ஆற்றலுக்கு தேவையான சத்து உணவு+காற்று+நீரிலிரிந்து நம் உடல் தயாரிக்கிறது பயண்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் ஒரு மின் பேட்டரியை போல..யாராவது செயல்படாத மின் பேட்டரியின் உயிர் எங்கே போனது என்று கேட்டதுண்டா..?

2. அப்படியானால் மரணம் என்றால் என்ன?
விடை : மரணம் என்பது நம் உடலில் உள ள அடிப்படை பணிகள் (Vital functions) நிரந்திரமாக செயலற்று போவது. மூச்செடுப்பது நின்று போவது,  இதய துடிப்பு நிற்பது, உடலில் வெப்பமின்மை, மூளை செயலற்று போவது.. இவைகளைத்தான் மரணம் என்று உயிரியல் அறிவிக்கிறது.. உடல் என்னும் சரீரத்திலிருந்து ஆத்மா என்று தனியாக பிரிவதுதான் மரணம் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை அதை ஒரு போதும் அறிவியல் அறிவித்ததும் இல்லை...

3. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை உண்டா?

விடை : வாழ்கை அனுபவத்து வாழ்வதற்கு மூளை வேண்டும். மூளையிலுள்ள செல் அணுக்கள் பாதிக்கப்பட்டால் மூளை செயல்படாது. ஆக மரணத்திற்கு பின் எந்த வாழ்கையுமில்லை.. மரணத்திற்கு பிறகு பல கோடி நுண் கிருமிகளுக்கும் புழுக்களுக்கும் நல்ல தீனியாக அமையும் நம் உடல் திரும்ப ஒன்று சேர்ந்து மூளை பழைய நினைவுகளோடு  செயல்படும் என்பதெல்லாம் சுத்த கட்டுகதை.

4. இறக்கும் தருவாயிலுள்ள மனித உடலை எடைபோட்டு உயிர் என்ற ஆன்மா உள்ளதாக அறிவியல் சொல்லுதே?

விடை : இதுவும் ஒரு கட்டுகதை. இறந்தவுடன் உடல் 0.0005 கிராம் கள் மட்டுமே இடை இழக்கும் (ஒரு சர்க்கரை பருகை விட சிறது) . உடலில் குறிப்பாக நுரைஈரலிலுள்ள வாயுக்கள் வெளியேறுவதுதான் அந்த இடை இழப்பு

5. மரணத்திற்கு பிறகு வாழ்வு இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றனவே?

விடை : Near Death Experience என்ற அறிவியல் துறை சாராத ஆய்வாளர்கள் செய்யும் கட்டுகதைகள். இதற்கு எந்த ஒரு ஆதாரமும் தர இயலாததால் இதை அறிவியல் நிராகரிக்கிறது.

#மரணமும்_அறிவியலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக