சனி, 10 மார்ச், 2018

சிந்திக்க வைத்த பதிவு

ஒரு பையன் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது சிகரெட் பிடிக்கப் பழகினான்.
பதினொன்றாம் வகுப்பிலேயே #தண்ணி அடிக்கப் பழகினான்.

தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் #பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.
அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால் #பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.

இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்.
கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து, #தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..

தூக்கிற்கு முன்தினம் கடைசி #ஆசை கேட்கப்பட்டது.பெற்றோரைச் சந்திக்க விரும்பினான்.பெற்றோரும் வந்தனர்.

கதறினர்.போலீஸ், #வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் #தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்,

மகன் அமைதியாகச் சொன்னான். "அவர்கள் #காரணமில்லை, நீங்கள்தான் " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து #ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும் அடித்து மிரட்டி போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.

அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் தூக்கு மேடை வரை வந்திருக்கிறது. எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்,..

ஆசிரியர் #கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும். இதை #பெற்றோர் உணரவேண்டும்.

சிந்திக்க வைத்த பதிவு.
பரிவும், பாசமும் பிள்ளைகளின் பண்பையும்,வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சிறக்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக