வெள்ளி, 30 மார்ச், 2018

பட்டா மாறுதலுக்கு வருவாய்த்துறைக்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டாம்

பதிவு – 1,329]
பட்டா மாறுதலுக்கு வருவாய்த்துறைக்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு:  No need to pay fees to revenue department for sub-division:HC
=================================================
நீதிமன்ற உத்தரவு நகல் :   https://bit.ly/2IWfr89
--------------------------------------------------------------
பத்திரப் பதிவின்போது நில அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்கு கட்டணம் செலுத்தும் நிலையில், அந்த சேவைகளுக்காக வருவாய்த் துறையிடம் தனி கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கவுன்சில் செயலர் ஓ.பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பத்திரப் பதிவு அலுவலகங் களில் பத்திரப் பதிவு நடைபெறும்போது, வாங்கும் சொத்தை அளவீடு செய்யவும், பட்டா மாறுதல் செய்யவும் பதிவுக் கட்டணத்துடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர், சொத்தை அளவீடு செய்யவும், பட்டா மாறுதல் செய்து தரும்படியும் வருவாய்த்துறையிடம் விண்ணப்பிக்கும்போது, அதற்காக தனிக்கட்டணம் செலுத்துமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, பத்திரம் பதிவு செய்யும்போது நில அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்குரிய விண்ணப்பம் மற்றும் பணத்தை உடனடியாக பத்திரப் பதிவுத்துறை வருவாய்த்துறைக்கு அனுப்பவும், அந்த விண்ணப்பம் மற்றும் கட்டணத்தை ஏற்றுக்கொண்டு, புதிதாக விண்ணப்பம், கட்டணம் வசூல் செய்யாமல் நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் செய்து தர வருவாய்த்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிழ்வாணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பதிவுத்துறை ஐ.ஜி தாக்கல் செய்த பதில் மனுவில், அசையா சொத்துகளை பதிவு செய்யும்போது, நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் தொடர்பாக படிவம் 52 பெறப்படுகிறது. இந்த படிவம் வட்டாட்சியருக்கு அனுப்பப்படும்.
இது தொடர்பாக, தமிழக அரசு 1984-ல் பிறப்பித்த அரசாணை அடிப்படையில், நில அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்கு பதிவுத்துறையில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டிருந்தது.
விசாரணைக்குப் பின், தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பத்திரப் பதிவின்போது, நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் செய்ய கட்டணம் செலுத்து வதே போதுமானது. இந்த சேவைகளுக்காக வருவாய்த் துறைக்கு தனிக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என உத்தரவிடப்பட்டது.
Source: tamil.thehindu 19 Feb 2015
The Madurai Bench of the Madras High Court has ruled that a buyer of a land need not pay fee again to the revenue authorities for sub-division of immovable property and issue of patta.
A division bench, comprising of Chief Justice Sanjay Kishan Kaul and Justice S.Tamilvanan, held that once the application, along with fee, is collected with the document for registration of immovable property, the registration department should forward the same to the Revenue Department for sub-division survey work and patta issue to the owner (buyer) of the land.
The court was passing orders while closing a petition by Madurai-based Consumer Rights Protection Council Secretary O Paramasivam challenging levy of fees by both Registration and Revenue departments.
The Inspector of Registration had stated that patta transfer application in prescribed form is tendered along with documents presented for registration and forwarded by the sub- registrar to the tehsildar in whose jurisdiction the property was situated. The job of collecting the fee for sub-division survey and issue of patta was entrusted with the Registration Department as per a Government Order issued in 1984.
"This shows that requirement is to pay only one set of fee, but the collecting agency for such fee is now registration office. No second set of fee (demanded now by the revenue department) is required to be paid," the judges said.
Source: .business-standard February 18, 2015
--------------------------------------------------------------------------
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் பதிவுத்துறை சார்ந்த எனது அனைத்துபதிவுகளின் தொகுப்பு::
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1219949188148963
---------------------------------------------------------------------------
என் முகநூல் பதிவுகளை அதன் தலைப்புகள் வாரியாக வகைப்படுத்தப்பட்டதன் மொத்த தொகுப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1220044361472779

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக