வியாழன், 27 அக்டோபர், 2016

*வாழ்க்கை மலர்கள்:

*நமது கடமை*

பழக்கத்தின் காரணமாக எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. அவற்றை எல்லாம் படிப்படியாகப் போக்கிக் கொள்ளலாம். எந்தச் சீர்திருத்தமும் இடித்துக் கூறியோ, குற்றம் கூறியோ வரமுடியாது. ஆகவே, நலம் கூறி, நலம் செய்து அதன் மூலமாகத் தான் தீமை ஒழிவதற்கு, வேண்டாமை ஒழிவதற்கு நாம் பார்க்க வேண்டும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் நல்லதைப் புகுத்த வேண்டியது என்ற முறையில் ஒவ்வொரு குடும்பத்திலேயும் மனவளக்கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால், மனம் ஒடுங்குகின்றது; அடங்குகின்றது. அறிவு, நுட்பம் பெறுகின்றது. அந்தச் சிந்திக்கும் ஆற்றல், அறிவு, நுட்பம் இவை கிடைத்து விட்டால், அவற்றின் கீழே பொக்கிஷம் போல அனைத்து நலன்களும் கிடைக்கும்; எல்லா மனிதர்களுக்கும் தேவையான அத்தனையும் கிட்டும்.

“தவம் செய்து கடவுளிடம் வரம் கேட்கப் போகிறேன்” என்ற ஒருவரிடம் “நீ என்ன கேட்டாலும் அது பற்றாக்குறையாகத் தான் இருக்கும்” என்று மற்றவர் கூறிவிட்டு “நான் தவம் செய்யும் போது கடவுளே என்னிடம் வந்து, உனக்கு என்ன வரம் வேண்டும்? ராஜ்யம் வேண்டுமா? என்று கேட்டாலும் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே வருவேன். எனக்கு நல்ல அறிவு வேண்டும்” என்று தான் கேட்பேன் என்றார், “அதுதான் சரி” என்று முதலாமவர் ஒத்துக் கொண்டார். அது போல நல்ல அறிவு இருக்குமேயானால் அதன் கீழ் எல்லாம் பெறலாம்.

ஆகவே, அறிவை மேம்படுத்த வல்ல, அறிவைத் திடப்படுத்த வல்ல, அறிவைக் கூர்மைப்படுத்த வல்ல இந்த மனவளக்கலையைப் பயின்று இதுவரையிலே இந்த அறிவைப் பற்றி அறியாமல், வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், செய்த தவறுகளினால் ஏற்பட்ட விளைவுகளை எல்லாம் போக்கிக் கொண்டு மேன்மேலும், அத்தவறுகள் எழாமல் காத்துச் சிறப்பாக வாழ வேண்டுமானால், இந்த மனவளக்கலையை ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணும், பெண்ணும் சமமாகக் கற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்.

PART TIME JOB AVAILABLE AT ALL OVER THE WORLD
WHATS APP NO
CALL +91 9994968884.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக