சனி, 15 அக்டோபர், 2016

" *தூரத்து உறவு* ✍வைரமுத்து

✈```எரிமேடையில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் உடலைக் கடைசியாகப் பார்க்க அமெரிக்காவிலிருந்து பறந்து வந்தான் சிவராமன்.....```

👤 *எனக்கு உயிர் தந்த உடல், நேற்று வரை அப்பா ஓர் உயிர்; இன்று உடல்; நாளை வெறும் சொல்....*

😩 *அப்பாவின் மரணத்திற்கு அழமுடியாத அழத்தெறியாத ஒரு தலைமுறை தயராகிவிட்டது.*

📲 *மயானத்தில் மனைவியின் குரல் கைபேசியின் மூலம் ஒலித்தது. சடங்குகளில் தள்ளி நல்லுங்கள் 'இன்ஃபெக்க்ஷன்' வந்து தொலைக்கப் போகுது.*

♨ *வெந்து தணிந்தது கூடு*

👲 *மொட்டையடிப் பதை மறுத்து நீ........ண்ட யோசனைக்குப் பிறகு மீசையை மட்டும் தியாகம் செய்தான்*

😭 *உடைந்த குரலில் கதறி அழுதாள் அம்மா........*

😭 *அவரை பொழைக்க வைக்க வேண்டாம்; சாகும்போது பக்கத்துல கூட இல்லையே......*

🗣 *என்னம்மா பண்றது...? தூரம்!*

😭 *"ஆமாப்பா....... எல்லாமே தூரமாப்போச்சு"*

*வாரம் கடந்தது........*

🏛 *ஒரு இடம் பாத்திருக்கிறேன்மா? பெத்த தாய் மாதிரி உன்னக் கவனிச்சுக்குவாங்க "பழத்தோட்டம்னு" ஒரு முதியோர் இல்லம்.*

🏤 *அப்ப வீடு........?*

🏤 *நீயே இல்லாதபோது இந்த வீடு எதுக்கு? வித்திடலாம்மா*

😠 *மகனே சிவராமா? எனக்கு ஒரே ஒரு ஆசை என்றாள் அம்மா.*

🏤 *அப்பா கிடத்தப்பட்டிருந்த தரையில் விழுந்தாள். உருண்டாள். கண்ணீரால் நனைந்தாள்;*

🏛 *"கவலையே படாதீங்க இனி உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இவங்க அம்மாதான்" என்றான் பழத்தோட்டத்தின் காப்பாளர்.*

✈ *நியூயார்க் சென்றான் சிவராமன்; மனைவி வரவேற்க காத்திருந்தாள்*

🛬 *அமெரிக்காவில் இறங்கியதும் அம்மா இறந்த செய்தியை மனைவி கூறினாள்.*

🖥 *மறுநாள் அதே நேரம் அம்மாவின் உடல் மின்மயானத்தில் கொண்டு செல்வதை கணினித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்*

♨ *13412 கி.மீ தூரத்தில் "ஸகைப்பில்" எரிந்து கொண்டிருந்தாள் அம்மா.*

படித்ததில் வலித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக