திங்கள், 31 அக்டோபர், 2016

திருட்டுப்பயல்களை காப்பாற்ற ஒரு சட்டமா..?* *நமக்கு எதற்கு….?*

உச்சநீதிமன்றத்தில் *(சுப்ரீம் கோர்ட்)*
ஒரு வழக்கு.
அதுவும் பொது நல வழக்கு…
நேற்று முன் தினம்
விசாரணைக்கு வந்திருக்கிறது.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் – 500 கோடி
ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கி திரும்ப கொடுக்காத
பெரும்புள்ளிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்பது வழக்காளரின் கோரிக்கை…

தலைமை நீதிபதி
*டி.எஸ். தாக்கூர்* அவர்களின் அமர்வு
முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. 57 பேர்
கொண்ட ஒரு பட்டியலை *“சீல் இட்ட கவரில்”* வைத்து ரிசர்வ் வங்கி கோர்ட்டில் ஒப்படைத்தது. அதாவது –
அது ரகசியமான விஷயமாம்…! நீதிபதி மட்டுமே பார்க்க
பட்டியலை கொடுத்திருக்கிறது.

இந்த 57 மாபெரும் கொள்ளைக் காரர்களிடமிருந்து மட்டுமே
வர வேண்டிய மொத்த கடன் தொகை –

மூச்சை அடைந்து விடாதீர்கள் –
*85,000 கோடி*–
அதாவது
எண்பத்தைந்து ஆயிரம் கோடி ரூபாய்கள்…….!!!!!!!!!!!!

*( இது 500 கோடிக்கு மேல் உள்ளவர்களின் பட்டியல் மட்டுமே… 500 கோடிக்கு கீழே உள்ள வராத கடங்காரர்களையும் சேர்த்தால், திரும்ப வராத கடன் தொகை ஒரு லட்சம் கோடியை தாண்டுமாம்…!!!)*

இந்த கடங்காரர்களின் பட்டியலை இதுவரை நீங்கள்
ஏன் வெளிப்படுத்தவில்லை என்று கேட்ட கோர்ட்டுக்கு –
ரிசர்வ் வங்கியின் வழக்குரைஞர் சொல்லி இருக்கிறார் –

” ஏமாற்ற வேண்டும் என்பது இவர்களின் நோக்கமல்ல…
அவர்களின் இயலாமை தான் காரணம்…. மேலும் அவர்களின்
விவரங்களை வெளியிட சட்டம் இடம் கொடுக்கவில்லை…
*(“Names of defaulters cannot be made public under the statutory law ”)*

இந்த பதிலைக் கேட்டால் நம் நிலையை நினைத்து
அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
வீடு வாங்க வேண்டும் என்று 5 லட்சம், 10 லட்சம் கடன் வாங்கியவர்களின்
பெயர்களையும், பெண்களாயிற்றே என்று கூட பார்க்காமல்

புகைப்படங்களையும், பத்திரிகைகளில் விளம்பரங்களாக
வெளியிடும் வங்கிகளின் சார்பாகத்தான் இந்த வக்காலத்து
முன்வைக்கப்படுகிறது.

வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திரும்ப கொடுக்காமல்
ஏமாற்றுபவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ
வெளியிடக்கூடாது என்று எந்த சட்டம் கட்டுப்படுத்துகிறது..?

ஒரு வேளை அப்படி ஒரு சட்டம் இருந்தால் அது –
கோடிக்கணக்கில் ஏமாற்றுபவர்களை மட்டும் தான் பாதுகாக்குமா…? வீட்டுக்கடனை உரிய நேரத்தில் திரும்ப
கொடுக்க தவறும் சாமான்ய மக்களை அந்த சட்டம் பாதுகாக்காதா…?

ஒரு வேளை அப்படி ஒரு சட்டம் இருந்தால் –
அதைத் தூக்கி எறிவதற்கு இதைவிட சிறந்த நேரம்
உண்டா….?

உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கி வழக்குரைஞரிடம்
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்
*Right to Information Act* இந்த பெரும் கடங்காரர்களின் பட்டியலை
பொது தளத்தில் வெளியிட வேண்டி இருக்கும் என்றும்

வங்கிகள் இந்த நாட்டு மக்களின் நலத்திற்காக
உழைக்க வேண்டுமே தவிர வங்கிகளின் நலத்திற்காக
அல்ல என்றும் கூறி இருக்கிறது.

வழக்கை ஒத்தி வைத்துள்ள நீதிமன்றம்,
அதற்குள்ளாக ரிசர்வ் வங்கி தனது நிலையை தெளிவாக
தெரிவிக்க வேண்டுமென்று உத்திரவிட்டிருக்கிறது.

இந்த கொள்ளைக்காரர்களால் எப்படி இவ்வளவு பணம்
கடனாகப் பெற முடிந்தது…? தவணைகளை திரும்பச்
செலுத்தாமலே மேலும், மேலும் *OVER DRAFT* வாங்கவும்
மீண்டும் மீண்டும் புதிது புதிதாக கடன்களை வாங்கவும்
இவர்களால் எப்படி முடிந்தது…?

இதில் வங்கிகளின் உயர் அதிகாரிகளின் பங்கு என்ன..?

அரசியல்வாதிகளின் பங்கு என்ன…?

ஊரை ஏமாற்றும் மிகப்பெரிய கூட்டம் ஒன்று
இத்தகைய கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

பெரிய பெரிய தொழிலதிபர்களும்,
அரசியல்வாதிகளும்,
வங்கிகளின் உயர் அதிகாரிகளும் அடங்கிய கும்பல் அது…

ரகசியக்கூட்டணி வைத்து நாட்டைச் சுரண்டும்
இவர்களின் கொட்டங்களை நீதிமன்றங்களால்
மட்டும் தான் அடக்க முடியும்….
சுப்ரீம் கோர்ட் இதை தொடர்ந்து கவனிக்கும்

என்று நம்புவோம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக