செவ்வாய், 18 அக்டோபர், 2016

வலிமையான உடல் அமைப்பு பெற

(1) காலையில் 5கி.மீ ஓட்டபயிற்சி செய்ய வேண்டும். 1கி.மீ மணலில் நடக்கவும்.
(2) நல்ல காற்றோட்டம் உள்ள வீட்டில் குடியிருக்கவேண்டும்.
(3) ஆடாதொடா கசாயம் குடிக்கவும்.

காலை உணவாக இரும்பு சோளக் கூழ் குடிக்கவும் , கூழுக்குப் பொறியல் பயறு சாப்பிடவும், மதிய உணவு சம்பா நெல்லுச்சோறு , பருப்புச்சாம்பார், பசுமாட்டு நெய்,மாலையில் சுட்ட தட்டை பயிறு சாப்பிடவும்,இரவில் கேழ்வரகுக்களி , பல கீரைக்குழம்பு சாப்பிடவும்

பல கீரைகள்{சிறுகீரை, தைவேளைகீரை, குப்பைகீரை, நாயுருவி, மகிலிக்கீரை, தண்டுகீரை,பொன்னாங்கன்னி
இரவு பஞ்ச காவ்யா குடிக்கவும்

காலையில் அகத்திக்கீரைசூப் , பொறியல் வரகுச் சோறு ,மொச்சைப்பயிறு பொரியல் தயிர் கலந்து சாப்பிடவும்.
மதிய உணவு- கம்மங்கூழ், கடலைப்பருப்பு, துவையல், கருப்பட்டி
மாலையில் ஆட்டுப்பால் 500மிலி குடிக்கவும் 250கிராம் சுட்டகடலை
இரவு உணவு- சோறு,கத்திரிக்காய் சாம்பார் நெய் சேர்த்து சாப்பிடவும்.தூங்க செல்லும் முன் வேலிபருத்தி மூன்று இலைகள் சாப்பிடவும். பஞ்ச காவ்யாசாப்பிடவும்.

இரவு கம்மங்களி, பாசி பயறு குழம்பு, பிஞ்சுகத்தரிக்காய் பொரியல்

காலையில் வெங்காயமும் , சீரகமும் கலந்த சாறை 3 சொட்டு கண்ணில் விடவும். தினமும் காலையில் சூரியனை கண்ணில் பார்க்கவும்.
காலை சோளத்தோசை , கடலை சட்னி, தக்காளி சட்னி
மதியம் -சோறு, வெற்றிலை வள்ளிக்கிழங்கு சாம்பார், தண்டுக்கீரைப் பொரியல்
மாலையில் பால் வெலங்காய் குடிக்கவும்
இரவு கேழ்வரகு புட்டு, வெல்லம், தேங்காய் பூ, நல்லெண்ணை.
கொட்டகரத்தை சாறு 10மிலி குடிக்கவும்

காலை குதிரைவாலி சோறு, கொள்ளுசோறு, கொள்ளுதொக்கு, நெய் சேர்த்து சாப்பிடவும்
மதிய உணவு
கேழ்வரகு கூழ், முருங்கை கீரை பொரியல் சாப்பிடவும்
மாலையில்

5 அல்லி கிழங்கு சுட்டுத்தின்னவும் ஈரவு சோளக்களி, பலக்கீரைக்குழம்பு

பூலாங்குச்சி,நாயுருவி வேர்,கருவேலங்குச்சி,வேப்பங்குச்சி,ஆலவிழுது இதில்.ஏதாவது ஒன்றில் பல் துலக்கவும்.

காலை:
சாமைச் சோறு,தட்டை பயறு குழம்பு,அகத்திக்கீரை பொரியல்.
மதியம்:
தினைச் சோறு,தயிர்,பொன்னாங்கன்னி பொரியல்.
மாலை:
இன்புற தோசை நான்கு சாப்பிடவும்,கடலை சட்னி.

காலை: தேங்காய் பால் கசாயம் சாப்பிடவும்,சோறு,சுரைக்காய் குழம்பு.
மதியம்: தினைச் சோறு,தயிர்,சுண்டல் பொரியல்.
மாலை:கேழ்வரகு,முருங்கைக்கீரை அடை.
ஈரவு:சோறு,துவரம் பருப்பு சாம்பார்,பூசணிக்காய் பொரியல்.

காலை: கஞ்சி சாதம்,புளிதுவையல்.
மதியம்:கம்மங்கூழ்,மோர்,மிதுக்கவத்தல்,சுண்டவத்தல்,
பாகற்காய் பொரியல்.
மாலை :அரிசி புட்டு,வெல்லம்,அல்லது கேழ்வரகு புட்டு,நல்லெண்ணெய்.
ஈரவு:சோறு,பூண்டு குழம்பு,அல்லது கத்தரிக்காய் புளிக் குழம்பு.

உளுந்தங்கழி,
நெல்லுக்கழி,
கடலை,அரிசிமாவு,வெல்லம்.
எள்ளு,வெல்லம்.
விலாம் பழம்.வெல்லம்.
மூலிகை ஆவி பிடித்தல்.
நொச்சி இலை தலையனை.
மருள் எண்ணெய் காதில் விடுதல்.
மண் குளியல்,மூலிகை குளியல்.
ஆவாரம் பூ சாப்பிடுதல்.
ஆவாரம் பூ சாப்பிடுவோர் சாவோரும் உண்டோ.
ஆடாதொடா டீ சாப்பிட்டால் ஆடாத காலும் ஆடும்,பாடதா வாயும் பாடும்.
சங்கு இலை உண்டால் வெங்கலம் போல் பேசுவர்.
அழுத பிள்ளை சிரிச்சதாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்.
நெஞ்சில் அடிபட்டால் பிஞ்சுக் கத்தரிக்காய் இருக்கு.
இளைத்தவனுக்குக் எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு.
கண்ணுக்கு என்ணெய் கட்டுதல்.
உடல் முருக்கேற முருங்கைக் கீரை.
முடம் போக முடக்காத்தான்.
வாதம் போக வாத மடக்கி.
வேகமாகச் செயல் பட வேலிப்பருத்தி.
உடலைப் பொண்ணாக்கப் பொண்ணாங்கன்னி.
வாட்ட சாட்ட உடலுக்கு வரகுக் கஞ்சி.
சாமத்தில் செயல்படச் சாமைச் சோறு.
கடலை உடலை வளர்க்கும்.
உள்காயம் ஆற கொட்டக் கரங்தை
இன்புறா சாப்பிடாதவன் இருமி சாவான்.
வாய் புண்ணுக்கு ஆதாலை பால்.
வயிற்றுப் புண்ணுக்கு ஆட்டுப்பால்
இடு மருந்துக்கு புளி.
நரி வேலாம்பழம் சாப்பிடவும்.
வெடி தேங்காய் சாப்பிடவும்.
பனைப் பால் சாப்பிடவும்.
வெற்றிலைவள்ளிக் கிழங்கு,வெல்லம் சாப்பிடு.
பூலாங் கசாயம், தினை மாவு,வெல்லம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக