செவ்வாய், 18 அக்டோபர், 2016

ஆமணக்கு எண்ணெய் – முடி இழப்பு, பொடுகு, பிளவு மற்றும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு!


=====================================================

அழற்சி எதிர்ப்பு மற்றும்ஆன்டி-பாக்டீரியல் பண்புகளுக்காக, ஆமணக்கு எண்ணை ஒப்பனைப் பட்டியலில் சேர்க்கப் படும் இயற்கையான ஒரு கலவையின் கூறாகும். அதனால் இது, முடி மெலிதாதல், உலர்ந்த உச்சந்தலை, முடி இழப்பு, பிளவு முனைகள் போன்ற முடி பிரச்சினைகளுக்குப் பதிலாகும். இது விதிவிலக்கான முடி வளர்ச்சிக்கு உதவி செய்யும், வைட்டமின் ஈ, மற்றும் புரோட்டிங்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகளைக் பெற்றுள்ளது.
பலன்கள்

1. முடி வளர்வதை அதிகரித்து மற்றும் முடி இழப்பைக் கட்டுப்படுத்துகிறது.

ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைமுடுக்கி விடும் ரைசினொலிக்அமிலம் மற்றும்ஒமேகா- 6 அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், கொண்டுள்ளது எனவே முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது..அது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உதவியுடன் உச்சந்தலையில் ஊட்டமளிக்கும் மற்றும் வேர்களைவலுப்படுத்தும் வேலையை செய்கிறது.
குறிப்பு:  ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணையை ஆமணக்கு எண்ணையுடன் கலக்கவும். சிறிதளவு எண்ணையை உங்க்ள் கையில் எடுத்து உங்கள் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யத் துவங்கவும். அதை முடித்த பிறகு, உங்கள் தலை ஒரு மழைத் தொப்பியினால், முடிந்தால் இரவு முழுதும் மூடிவிட்டு விடுங்கள்.அடுத்த நாள் உங்கள் முடியை முற்றிலும் அலசவும்.

2. உச்சந்தலையில்தொற்றுமற்றும் பொடுகை எதிர்த்துபோராடும்

ஆமணக்கு எண்ணை, பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைப் பெற்றிருப்பதால், இது உச்சந்தலை தொற்றுகள் மற்றும் வழுக்கை இணைப்புகள், அரிக்கும் உச்சந்தலை போன்ற சிக்கல்களை கையாளுவதற்கு சரியான தீர்வாகும்.இந்தப் பண்புகள் நோய்க்கிருமிகள்மற்றும் மைக்ரோ உயிரினங்களை எதிர்த்து போராட உதவுகின்றன. கூடுதலாக, இது மிகவும் பொதுவான முடி பிரச்சினையைத் தீர்க்கிறது = பொடுகு
குறிப்பு: உங்கள் பொடுகு பிரச்சனை தடுத்து உதவ ஒரு பயனுள்ள தீர்வு, ஒரு மேசைக்கரண்டி ஆமணக்கு எண்ணையை ஆலிவ் எண்ணையுடன் எடுத்துக் கொண்டு அதை ஒரு பாதி எலுமிச்சை பழச் சாற்றுடன் கலக்கவும். அதை நன்றாக முடியில் தேய்த்து அரை மணி நேரத்திற்குப் பின் அலசவும்.

3. முனைகளில் பிளவைக் குறைக்கிறது
பிளவு முனைகள், ஒரு பொதுவான பிரச்சினையாகும். மற்றும் ஆமணக்கு எண்ணை போன்ற இயற்கை வைத்தியம், உங்கள் பிளவு முனைகளை உச்சந்தலையில் ஆழமாக ஊடுருவிச் சென்று சமாளிக்கிறது மற்றும் முரட்டு முடிகளின் புறத்தோலை மென்மையாக்க உதவுகிறது.
குறிப்பு :ஆமணக்கு எண்ணெய்நிலைத்தன்மைஅதிகம் உள்ளது, என்வே இதை சிறிது ஆலிவ் எண்ணை அல்லது ஜொஜொபா எண்ணையுடன் நல்ல பயன்பாடுக்கு உபயோகிக்கலாம்.ஆலிவ் எண்ணை சுருள் முடிகளை படிய வைப்பதிலும் பிளவு பட்ட முனைகளை கட்டுபடுத்துவதிலும் உதவுகிறது.இந்த எண்ணையை உங்கள் முடியில் எல்லா பகுதிகளிலும் தடவி அரை மணி நேரத்திற்குப் பின் அலசவும்.

4. ஒரு இயற்கை கண்டிஷனர் மற்றும் ஈரப்பதனியாக பணியாற்றுகிறது

ஆமணக்கு எண்ணை மிகவும் “ஈரப்பதம் வாய்ந்தது” இது உங்கள் உச்சந்தலையில் ஊடுருவி செனறு முடியை உடனடியாக கண்டிஷன் செய்கிறது.எனவெ இந்த எண்ணை இழந்த பிரகாசம் மற்றும் முடி அமைப்புமுறை மீண்டும் பெற ஒரு சுலபமான வழியாகும்.அதன் விதிவிலக்கான ஈரப்பதம் மற்றும் சீரமைப்பு பண்புகளுடன், ஆமணக்கு எண்ணை, ஒரு முடித் தண்டுகளில் ஒரு மேல்பூச்சை அவற்றில், மிகத் தேவையான ஈரப்பதத்தை விட்டு செல்கிறது.
குறிப்பு:ஒரு ஷாம்பூவை உபயோகிப்பதற்கு குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன் உங்கள் முடியில் ஆமணக்கு எண்ணையைத் தடவவும்.நீங்கள்உங்கள் விருப்பமான கண்டிஷனருடன் ஒருதுளிஆமணக்கு எண்ணெயைக் கலந்து அதை தடவவும். உங்கள் முடியை கண்டிழன் செய்வதற்கு இன்னொரு இயற்கையான வழி, சிறிது ஆமணக்கு எண்ணையுகன், கற்றாழை ஜெல், தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இதை நன்றாகக் கலந்து உங்கள் முடிகளின் வேர்களில் தடவுவது தான். இதை அரை மணி நேரம் விட்டு பின்பு நன்றாக அலசவும்.

ஆமணக்கு எண்ணையை வாங்கும் போது என்ன பார்க்க வேண்டும்l?

அது, குளிர்-அழுத்தம் மற்றும் பதப்படுத்தப்பட்ட இருக்க வேண்டும், 100% தூய்மையாக, கன்னி ஆமணக்கு எண்ணையாக இருக்க வேண்டும். அதே போல், குளிர் அழுத்தம் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்படும் எந்த எண்ணையும், வெறுமனே அது தன் மூலப்பொருளின்இயற்கை மதிப்பைத்தக்க வைத்து கொண்டுள்ளது என்று அர்த்தம்.

ஆமணக்கு எண்ணையை எங்கே வாங்கலாம்l?

ஆமணக்கு எண்ணெய் வழங்கும் சில பிராண்டுகள் (இந்தியாவில்) ப்யூர் கேஸ்டர் ஆயில் ரெசுனஸ் கமின்ஸ், சன்ப்ளவர் கோல்டு-பிரெஸ்டு ப்யூர் நேச்சுரல் கேரியர், அலோ வேத கோல்டு-பிரஸ்டு ஹெக்ஸ்ன் ப்ரீ கேஸ்டர் ஆயில் ஆகியவை.
தயவு செய்து கவனிக்கவும்: இது எந்த தயாரிப்புக்கும் ஒப்புதல் அளிக்கும் முயற்சி அல்ல, மற்றும் அந்த கூறப்பட்ட பொருளின் பலன்கள் வெவ்வேறு தனிபட்ட நபர்களிடையே வேறுபடலாம்.:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக